Thursday, March 24, 2011

எப்படி சொல்வேன்..???


எப்படி சொல்வேன்
உனக்கு எப்படி சொல்வேன்
என் அன்பை..

என் மௌனத்திலா..?
என் கோபத்திலா..?
என் கண்ணீரிலா...?
உன்னை பார்த்த உடன்
பூத்துவிடத் துடிக்கும்
என் புன்னகையிலா..?

என் விழிகள் முன்மொழியாத
என் அன்பை..
என் கவிதையின் வரிகளில்
வழிமொழியவா..??

எப்படி சொல்வேன்....
என் அன்பை...??

******************************
இடைவெளியற்ற உன் நினைவால்
இடையில் என் வரிகளும் விட்டுப்போகிறதடா..

என் கவிதைகளை தானே
வாசிக்கச் சொன்னேன்...

நீ
ஏன் மௌனித்துக் கொள்கிறாய்..??
ஏன் மௌனித்துக் கொல்கிறாய்...???

Sunday, March 13, 2011

ஜப்பான் நகர் (அ)வலம்



எங்கு நோக்கிலும் நீலம்....
கீழும் நீலம்
மேலும் நீலம்
எட்டாத் தொலைவு தன்னில்
பார்வையின் சிறு வட்டத்திற்குள்
கவிகிறது நீலவானம்...!

ததும்பும் நீரில்
தடம் மாறாமல்
உருண்டு நிற்கின்றன
மனித உடல்களும், உடமைகளும்..!

தொகுதி தொகுதியாய் கார்களும்
கரைந்து போன மண்ணாய் கட்டிடங்களும்..
ஒளி வெள்ளத்தில் மிதந்த நகரம்
இன்று நீரில் மிதந்து
இருளோடு கவிகிறது..!

பசிபிக் பெருங்கடலே - நீ
அலை அலையாய் புன்னகைத்தாயே...!
இதற்குத் தானா..??
சில வருட இடைவெளிக்குப் பின்னான
இரண்டாம் பாகமோ....?

உன்னுள் சிக்கியவர்கள்
மூழ்கினார்கள்...
வெளிவந்தார்கள்..
மறைந்தார்கள்...
நீர் குடித்து நிலை மறந்தார்கள்..
மிதந்தார்கள் சடலங்களாய்..!

இரக்கமின்றி களவாடி விட்டாய்
இறுகி நிற்கிறோம் நாங்கள்...

இரு பகல்
இரு இரவு முடிந்து விட்டது..

தடம் மாறி வந்த தடயத்தால்
பார்வைகளால் மட்டுமே
ஒருவரை ஒருவர்
நலம் விசாரிக்கும் ஊமை வாழ்க்கை
அரங்கேற்றமாகிறது அங்கு...!!

Tuesday, March 8, 2011

சிந்தனை செய் மனமே..!!

சில இம்சைகளோடு ..

பல கழிவுகளை பெற்றுக் கொண்டு

பொறுமையோடு நிற்கிறது

ஒரு குப்பைத்தொட்டி

தனக்குள் பேசிக்கொண்டே...

"வேண்டாத கழிவுகளுக்கு மட்டுமா..??

நீ வேண்டாம் என்று விசுறும்

உயிர் உள்ள பிஞ்சுகளுக்கும்..

நிரம்பிய குப்பையே மெத்தையாய்..

தாலாட்டு பாடாத தாயாக நான்..!!

என்னை கடக்கும் போது

முகம் சுழிக்கும் நீ..

குப்பையோ குழந்தையோ...

நீ வீசும் போது முகம் சுழிக்கவா நான்..??

மனிதா....

என்னை விட நீ எவ்விததில் உயர்த்தி..?"

Tuesday, March 1, 2011

காதலாய் ஒரு தேவதை....!





எட்டாத் தொலைவில் நீ..
உன் இதயத்தை
எட்டும் தொலைவு தான்
என் காதல்..!!
___________________________


இடைவெளி அதிகம் தான்..
உனக்கும் எனக்கும்...
இடையில் வரும் ஒளி கூட
அதிகம் இல்லை
உன் மீதான் என் காதலுக்கு...!!
_______________________________


உரக்கமற்ற இரவுகளில்
நெருங்கும் உன் நினைவுகள்
நெருக்காமல் போவதில்லை
என் இதயத்தை....!!
________________________________


நிதமும் தான் யுத்தம் செய்கிறேன்
உன்னுடனும் என் காதலுடனும்....
தினமும் ஒரு முத்தமாவது
கொடுத்து விட்டுப் போயேன்..!!
___________________________________


இரவின் மடியில் துயிலும்
அழகிய தேவதை நீ..
உன் ஜன்னலில்
நட்சத்திரங்கள் மாநாடா??
எனக்குள் அல்லவா நடக்கிறது
பட்டிமன்றம்...!!!
___________________________________


என் வீட்டு ஆளுயரக் கண்ணடியையும்
கொஞ்சம் பார்த்து விட்டுப் போயேன்
என்னை பைத்தியமாக நினைக்கும் அதுவும்
உன் அழகில் கொஞ்சம் மயங்கிப் போகட்டும்..!!
_________________________________________


நிதமும் தானே
யுத்தம் செய்கிறேன்
என் காதலோடு...
தினமும் ஒரு முத்தமாவது
தந்து விட்டுப் போயேன்..!!
______________________________


"நொடிக்கொரு முறை
உன் மீது காதல்"
என்றேன்...
"நொடிக்கொரு முறை தானா...?
நொடிகள் தோறும் இல்லையா...?"
கன்னத்தில் கிள்ளி
கண்ணால் சிரிக்கிறாயே..!!
____________________________________

Friday, February 18, 2011

.....காதல் வலிய(அ)து.....





..
காதல் ஒரு மாய வலை..
மனதிற்கு தெரியவில்லை ..
சிக்கிக் கொண்ட பின் தான் தெரிந்தது
சிதைத்து விடும் ஆயுளை என்று..!!!
தோழனாக இடமளித்த உன் இதயம் 
என் காதலை  சொன்னதும் 
தொட்டாற்சிணுங்கி இலை போல 
மொத்தமாக மூடிக்கொண்டதோ..?





ன் கரம் பற்றி ..
என் விரல் இடுக்கில் விரல் கோர்த்து 
நடை பயின்றாய்...!!
என் உயிரோடு உயிர் கோர்க்க மட்டும் 
மறுதலிப்போ...???




ன் தோள்களில் தடம் பதித்தன 
உன் தலை சாய்தல்கள்.....
எனதன்பு  உனதிதயத்தில் 
இதம் பதிக்க வில்லையோ..???


மூர்ச்சை உற்றுக் கிடந்த மரங்கள் 
வசந்த காலம் வந்ததும் 
துளிர் விடும் இலைகள் போல...
நீ வரும் வழி பார்த்ததும் 
வசந்தமாகும் என் இதயம்..!!!
ன்றோ...
வாசலில் உன் கால் பதிந்த 
சுவடுகள் கண்டதும்
என் இதழில் புன்னகை..
ஈரப்பசை இன்றி..!!

நிலத்தின் மீது பற்றட்ட மரமாக ...
நிலைக்கொள்ளாமல் ஆடி 
நின்றுவிட்டது என் வாழ்க்கை ..!!
ஏன் இந்த நிறுத்தம்..?
ன் வெற்று(ட்டும்)ப் பார்வை கூறிய 
வார்த்தைகளினாலா...?
பார்வையின் மொழி பெயர்ப்புகளா அது..???
மின்னல் இல்லை...
மழை இல்லை...
ஆனால் இடி மட்டும் 
என் இதயத்தில் இறங்கியதோ..??

லனமற்ற நீராக..
நீரில் விட்ட கல்லாக ...      
நீருக்குள் தோன்றும் குமிழியாய் 
மெதுவாக நொறுங்கியது என் உள்ளும்...
ஒரு அழகிய உணர்வு...!!










தொட்டதும் ஒட்டிக்கொள்ளும் கெட்டி இரவில் 
அழகான நிலவு...
நேற்று வந்ததும் அதே நிலவு தான்..
இன்று வந்ததும் அதே நிலவு தான்...
ஆனால்...
நேற்றைய நிலவில் கறை என்பது 
உன் கன்னத்தின் மச்சமாய் தெரிந்தது..
இன்றைய நிலவில் அது 
என் கண்ணீரின் எச்சமாய்  உள்ளது..!!!





பொத்தி வைத்த அழுகையும் 
பொத்துக்கொண்டு வந்தது..
கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டே
என் உடலின் செந்நீரும் வற்றிப் போனது!
என் கண்மனியே....
விட்டு விட்டு எரியும் 
உன் வீட்டு விளக்குகளாவது
விளக்குமா உனக்கு..??
நீ இன்றி விட்டு விட்டுத்  
துடிக்கிறது என் இதயம் 
என்பதை..??
சிந்தி விழப் போகும் என் உயிரினை 
கரை சேர்க்கவாவது வா...
என் கண்மணியே...!!!








Monday, February 7, 2011

மை விழி மயக்கம்..!!!



 தூண்டில் முள்ளாய் உன் விழிகள்....
அதன் காந்த விசை அறியாத என் விழிகள்..!
இரண்டும் சிநேகித்துக்கொண்ட நிமிடம்..
மீட்க முடியாமல் போனது என் இதயம்.!!
உன் பார்வை அம்புகள்
என் மீது தொடுக்கும் போரினை
சற்றே நிறுத்தி வை..
இல்லையேல்....
நான் உறைந்து விடுவேன்
உன் மை விழி மீது உண்டான மயக்கத்தில்..!!!

இதயத்தின் வாசலிலே...!!!


எத்தனை முறை என்னைக் கொன்றாலும் 
உயிர்பித்து விடுகிறேன்..
உன் மீதான என் காதலால்..!!!!
எந்த ஜென்மத்திலும் முடிவுறுவது இல்லை 
காதல் மட்டும்...  இதோ....
நான் எடுத்து விட்டேன்
மறு ஜென்மத்திலும் காதலாக....
ஆனால் நீ.....????
********************************************
என் வாழ்க்கைப்  பக்கங்களை 
புரட்டிப் போட்ட என் இரண்டாம் பாகம் நீ..!!!
எத்தனை முறை என் இதயத்தை 
துடைத்து வைத்தாலும் 
சத்தம் இல்லாமல் வந்து 
சதம் அடித்து விட்டாய்...!!!
*********************************************
மறைந்து போகும் நிமிடங்களைக் கூட 
மறக்காமல் சேர்த்து வைத்து விட்டேன்...
உன் சிறு புன்னகைக்காக ....!!!!
***************************************************************
நீயின்றி செல்லரித்து செயல் இழந்து 
கொண்டிருக்கும் என் உயிரினை...
 உன் பார்வையால்... 
செதுக்கினால் என்ன...???
முற்று பெற்றுக் கொண்டு இருக்கும் என்னில் 
என்றும் முடிவுறா தொடர் புள்ளி நீ..!!!!
****************************************************************
பெண்ணே...
நீ மட்டுமே..
இதயம் இன்றி.. 
என்னுள் குடியேறினாய்.. 
அனுமதி இன்றி..!
காத்து இருக்க வேணுமோ..
நான் மட்டும்..? இதயத்தோடு...??
******************************************************************