Friday, February 18, 2011

.....காதல் வலிய(அ)து.....

..
காதல் ஒரு மாய வலை..
மனதிற்கு தெரியவில்லை ..
சிக்கிக் கொண்ட பின் தான் தெரிந்தது
சிதைத்து விடும் ஆயுளை என்று..!!!
தோழனாக இடமளித்த உன் இதயம் 
என் காதலை  சொன்னதும் 
தொட்டாற்சிணுங்கி இலை போல 
மொத்தமாக மூடிக்கொண்டதோ..?

ன் கரம் பற்றி ..
என் விரல் இடுக்கில் விரல் கோர்த்து 
நடை பயின்றாய்...!!
என் உயிரோடு உயிர் கோர்க்க மட்டும் 
மறுதலிப்போ...???
ன் தோள்களில் தடம் பதித்தன 
உன் தலை சாய்தல்கள்.....
எனதன்பு  உனதிதயத்தில் 
இதம் பதிக்க வில்லையோ..???


மூர்ச்சை உற்றுக் கிடந்த மரங்கள் 
வசந்த காலம் வந்ததும் 
துளிர் விடும் இலைகள் போல...
நீ வரும் வழி பார்த்ததும் 
வசந்தமாகும் என் இதயம்..!!!
ன்றோ...
வாசலில் உன் கால் பதிந்த 
சுவடுகள் கண்டதும்
என் இதழில் புன்னகை..
ஈரப்பசை இன்றி..!!

நிலத்தின் மீது பற்றட்ட மரமாக ...
நிலைக்கொள்ளாமல் ஆடி 
நின்றுவிட்டது என் வாழ்க்கை ..!!
ஏன் இந்த நிறுத்தம்..?
ன் வெற்று(ட்டும்)ப் பார்வை கூறிய 
வார்த்தைகளினாலா...?
பார்வையின் மொழி பெயர்ப்புகளா அது..???
மின்னல் இல்லை...
மழை இல்லை...
ஆனால் இடி மட்டும் 
என் இதயத்தில் இறங்கியதோ..??

லனமற்ற நீராக..
நீரில் விட்ட கல்லாக ...      
நீருக்குள் தோன்றும் குமிழியாய் 
மெதுவாக நொறுங்கியது என் உள்ளும்...
ஒரு அழகிய உணர்வு...!!


தொட்டதும் ஒட்டிக்கொள்ளும் கெட்டி இரவில் 
அழகான நிலவு...
நேற்று வந்ததும் அதே நிலவு தான்..
இன்று வந்ததும் அதே நிலவு தான்...
ஆனால்...
நேற்றைய நிலவில் கறை என்பது 
உன் கன்னத்தின் மச்சமாய் தெரிந்தது..
இன்றைய நிலவில் அது 
என் கண்ணீரின் எச்சமாய்  உள்ளது..!!!

பொத்தி வைத்த அழுகையும் 
பொத்துக்கொண்டு வந்தது..
கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டே
என் உடலின் செந்நீரும் வற்றிப் போனது!
என் கண்மனியே....
விட்டு விட்டு எரியும் 
உன் வீட்டு விளக்குகளாவது
விளக்குமா உனக்கு..??
நீ இன்றி விட்டு விட்டுத்  
துடிக்கிறது என் இதயம் 
என்பதை..??
சிந்தி விழப் போகும் என் உயிரினை 
கரை சேர்க்கவாவது வா...
என் கண்மணியே...!!!
10 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஆயுளை சிதைத்தால் பரவாயில்லையே...
ஆளை அல்லவா சிதைத்துவிடுகிறது

பலருக்கு ஆயுளை சிதைத்துகொண்டு...
சிலருக்கு ஆளை சிதைத்துகொண்டு

உருவம் கொண்ட இதயத்திற்கு
உயிர் கொடுக்க தெரியாமல்போகிறது...

அன்பிற்கு ஏங்கும் இதயத்திற்கு
அன்பின் பிரிவை உணரதெரியாமல்போகிறது

பற்று கொள்ளும் இதயம்...
பின் பட்டும்படாமலும் பேசுகிறது....

இடி தாங்கும் இதயம்...
உன் காலடிபட்டு உடைகிறது..

விளக்கினை எளிதாய் அணைக்க தெரிந்தவள்... இதயம் துடிப்பதையும் எளிதாய் அணைக்க தெரிந்தவள்...

பிறர் மனதின் உணர்வுகள் இங்கே வரிகளின் வழியே இயல்பாய் எடுத்துக்காட்டுகிறது....

வாழ்த்துகள்....

சௌம்யா....... said...

நன்றி நண்பரே... அதனால் தான் காதல் வலியது...
வலியும் அது...(tat means love gives to great energy..and the same it gives more pain..)

Anonymous said...

நேற்றைய நிலவில் கறை என்பது
உன் கன்னத்தின் மச்சமாய் தெரிந்தது..
இன்றைய நிலவில் அது

என் கண்ணீரின் எச்சமாய் உள்ளது..!!!...this poem.like a story ...vaalthukal....
Vetha.Elangathilakam.
Denmark.

balasankar said...

மனதின் உணர்வுகள் இங்கே வரிகளின் வழியே இயல்பாய் எடுத்துக்காட்டுகிறது / super sowmiya

சௌம்யா....... said...

பாராட்டுக்கு நன்றிகள் பல...கோவை கவி அவர்களுக்கும் , திரு.பால ஷங்கர் அவர்களுக்கும்...

Nantha's Cool Pix said...

கவிதை மிக அருமை தோழி....
உங்ககிட்ட இன்னும் இன்னும் அதிகமா எதிர்பார்கிறேன்......!!!

நந்து,,,,

சௌம்யா....... said...

மகிழ்ச்சி நந்து....உங்கள் எதிர்பார்ப்பில் முடிந்தவரை மிளிரச் செய்கிறேன் என் கவிதைகளை..!!

ramvijay said...

என் உயிரோடு உயிர் கோர்க்க மட்டும்

intha varikku en nanbar oruvar eluthiya palaya kavithai pathil

thamilil uyirodu uyir serathu,
uyirodu mei srnthal mattume aluthu pirakkum.
Athu polave en nam uyir sera un mei thanthu vidu..

anaithu kavithaikalum arumai..

Keep on going ..we are here to cry for your words.

Nanri
vijay sankar
salem pakkam.

ramvijay said...

mannika .Eluthu pilai.


thamilil uyirodu uyir serathu,
uyirodu mei srnthal mattume eluthu pirakkum.
Athu polave nam uyir sera un mei thanthu vidu..


I dont know how to type tamil here.

Shiva sky said...

கவிதைக்கு இடையே உள்ள ஓவியத்தைவிட அழகு உங்கள் கவிதை....