எத்தனை முறை என்னைக் கொன்றாலும்
உயிர்பித்து விடுகிறேன்..
உன் மீதான என் காதலால்..!!!!
எந்த ஜென்மத்திலும் முடிவுறுவது இல்லை
காதல் மட்டும்... இதோ....
நான் எடுத்து விட்டேன்
மறு ஜென்மத்திலும் காதலாக....
ஆனால் நீ.....????
****************************** **************
என் வாழ்க்கைப் பக்கங்களை
புரட்டிப் போட்ட என் இரண்டாம் பாகம் நீ..!!!
எத்தனை முறை என் இதயத்தை
துடைத்து வைத்தாலும்
சத்தம் இல்லாமல் வந்து
சதம் அடித்து விட்டாய்...!!!
****************************** ***************
மறைந்து போகும் நிமிடங்களைக் கூட
மறக்காமல் சேர்த்து வைத்து விட்டேன்...
உன் சிறு புன்னகைக்காக ....!!!!
****************************** ****************************** ***
நீயின்றி செல்லரித்து செயல் இழந்து
கொண்டிருக்கும் என் உயிரினை...
உன் பார்வையால்...
செதுக்கினால் என்ன...???
முற்று பெற்றுக் கொண்டு இருக்கும் என்னில்
என்றும் முடிவுறா தொடர் புள்ளி நீ..!!!!
****************************** ****************************** ****
பெண்ணே...
நீ மட்டுமே..
இதயம் இன்றி..
என்னுள் குடியேறினாய்..
அனுமதி இன்றி..!
காத்து இருக்க வேணுமோ..
நான் மட்டும்..? இதயத்தோடு...??
****************************** ****************************** ******
1 comment:
நான் மட்டும்..? காத்து இருக்க வேணுமோ இதயத்தோடு...?? sowmya
Post a Comment