Tuesday, September 20, 2011

" தொலைக்கப்பட்ட தன்னியல்பு "





நியாயமா..
நியாயமாவென்று
கேள்விகளால் 
வேள்விகள் 
தொடக்கம் என்னுள்.. 

விடையறியும் 
ஆவல் நீள்கிறது.. 
ஆனால் 
எங்கோ சென்று
ஒளிந்துக் கொண்டு 
வேதனை தருகிறது... 

வேதனைகளை 
வெட்டிச் சாய்க்க 
புதிதாக சிரிக்கத் 
துவங்கி இருக்கிறது
மனம்.. 
இல்லை இல்லை
நடிக்கத் துவங்கி இருக்கிறது..
தன்னியல்பு நிலையை 
தொலைத்து விட்டு..

எங்கும் 
இருள் சூழ்ந்த நிலையில் 
வெளிச்சத்தின் 
கோடுகள் 
விரலிடுக்கில் 
நுழைவது போல் 
எங்கிருந்தோ வரும் 
மழைச் சாரலைக் கூட 
தொட்டுப் பார்க்க 
துணிவில்லை இப்போது...

உரசிச் செல்லும் 
தென்றலை தழுவும் 
தைரியமில்லை இப்போது.. 

காலை நேர 
பனித்துளியையும், 
மாலை நேர 
மஞ்சள் வானத்தையும் - அதன் 
நிர்மலமான நீல நிறத்தையும் 
ரசித்துப் பார்க்க 
மனமில்லை இப்போது...


5 comments:

arasan said...

மிக இயல்பான வரிகள் .. வாழ்த்துக்கள்

Unknown said...

நன்றி அரசன்...

Siva said...

அழகான படைப்பு.

நம்பிக்கைபாண்டியன் said...

வேதனைகளை வெட்டிச் சாய்க்க
புதிதாக
சிரிக்கத் துவங்கி இருக்கிறது மனம்..
இல்லை இல்லை
நடிக்கத் துவங்கி இருக்கிறது..

அருமையான வரிகள்!

பாலன் said...

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோ.