Monday, October 3, 2011

" சொப்பனச் சுவடுகள்.. "


.

அதீதம் இணைய இதழில் வெளியான எனது கிறுக்கல்...

இமைகள்
ஸ்பரிசிக்கத் தொடங்கிய 
அம் மென் தருணங்களின் 
இடைவெளியினில்
மௌனமொழியின் 
ஆர்பரிப்பினில்
கரைகின்ற நிமிடங்களை
கனவலைகள்
இழுத்துச் செல்கின்றன
ஆழ்நிலை உறக்கத்திற்குள்..

செல்லரிக்கப்பட்ட 
நிஜங்களை 
தாங்கி நிற்கும் நினைவுகள்
ஒன்றன்பின் ஒன்றாக
வரிசைப்படுத்தப் படுகிறன்றன..

வசியமாக்கப்பட்டதொரு
மோன வெளியில்
எண்ணக் கசிவுகளின்
வார்த்தை வடிவங்கள்
குரலுயர்த்தி ஓலமிடத் தொடங்கின.. 

திரும்பிய வினாடியில்
நுழையும் திசையறியாது
புழுதியின் பரப்பினில்
நிற்கமாட்டாமல் 
ஓடிக்கொண்டிருக்கிறது
கனவின் கால்கள்..

பதப்படுத்தப்பட்ட 
நிலையில் 
வரிசையாக
அடுக்கப்பட்டிருக்கிறது
குளிர்பதனப் பெட்டியில்
கற்பனைக் குவியல்..

அழிக்கப்பட்டதோ..
அடக்கிவைக்கப்பட்டதோ..
அடைய வேண்டியதோ.. 
விருப்பங்கள் நிறைவேற்றம் 
கொள்ளும் நிலையில் 
இமைகள் பிரிந்த 
விழிகளில்
துயில் துறக்கப்பட்டு
துரத்தப் படுகிறது
சொப்பனச் சுவடுகள்..

இயல்புகள் 
தொலைக்கப்பட்ட நிலையில்
தொக்கி நிற்கிறது 
ஆங்கோர்
கனாக் காலம்...


                                                                                                                 

3 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

மிக்க மகிழ்ச்சி தோழி...

உங்கள் படைப்புகள் மேலும் சிறக்க என் வாழ்த்துகள்...

Siva said...

மிகவும் அருமையான கவிதை.

நம்பிக்கைபாண்டியன் said...

பதப்படுத்தப்பட்ட நிலையில் வரிசையாகஅடுக்கப்பட்டிருக்கிறது
குளிர்பதனப் பெட்டியில்
கற்பனைக் குவியல்..

நல்ல கவிதை சிறந்த வரிகள்!