Thursday, April 28, 2011

" அன்புள்ள தோழனுக்கு "




எந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது
என்று கோலங்களை வரையறை செய்ய இயலாதோ... 
அது போல தான் நான் உன் மீது கொண்ட நட்பும்... 
எதிலிருந்து இணைந்தது என்று சொல்ல இயலாது...
நம் நட்பின் ஆரம்பத்தில் பெரிய மகத்துவம் ஏதும் இல்லை... 
ஆனால் அதன் பிறகான நாட்களில் ஒர் கவித்துவமும் கை 
கோர்த்து நடந்து கொண்டிருக்கிறது....

யாரென்று அறியாமல்..
பெயர் கூடத் தெரியாமல்..
முதலில் எங்கு தொடங்குவது..
பல கேள்விகளுக்கு இடையே
மெல்லியதாய் பூத்தது 
புன்னகை அரும்பு
நம் இதழ்களில்...
அது தான் விதையோ....????
இன்று வேரூன்றி 
விருட்சமாகி நிற்கிறது
நம் நட்பு...

எண்ணங்களில் அன்பினை 
அருதியிட்டு கூற இயலாது....
நான் கொண்ட நட்பும் அன்பும் என்றும் மாறாது..... 
இவ்வுலகில் வானும் மண்ணும் 
மாறும் காலம் என்றாகிலும் ஏற்படுமா...??
அது போல தான்
 நான் உன் மீது
 கொண்ட நட்பும்...?

ஒரு நாள் ....
என் பாதத்தின் பயணம் 
நிறைவடையலாம்...
என் விழிகளின் 
தேடுதல் அனைத்தும்
ஓய்வெடுத்துக் கொள்ளலாம்...
என் இதயத்தின் துடிப்பு
அடங்கவும் கூடும்....
என் இளமையின் 
வேகமும் தளர்ந்து போகும்....
ஏன் இந்த உலகமே கூட
அழிந்து போகும்....
ஆனால் ...
அப்போதும் என் ஸ்வாசமும்...
என் நட்பும்.... 
உன்னைத் தேடி மட்டுமே
அலைந்து கொண்டிருக்கும்....
மீண்டும் உன் நட்பை உயிர்பித்துக் கொள்ள....!!!

உள்ளங்கள் பிரிந்தாலும்..
என் உறவுகள் முறிந்தாலும்...
நினைவுகள் என்றும் பிரிவதில்லை..!!
நிகழ் காலம் மாறினாலும்..
வருங்காலத்தில் மலரும்
உன்னதமான் அன்பல்லவா நட்பு...!!
அது என் நெஞ்சில் நிற்கும் உயர்வான சொந்தமல்லவா...!!
என் உயிர் இருக்கும் வரையிலும் 
என் உடன் இருக்கும் சொந்தம் நீ....

தித்திக்கும் நட்பினில் திகட்டாமல் அன்பு செய்யத் தெரிந்தவள் நான்...
அன்பு என்னும் உணர்வு அஹிம்சா சக்தியின் உயிர்ப்பு....!!!

கடந்து வந்த வயதினில் 
கரைந்து போன நிமிடங்களின் 
நிகழ்வுகள் 
மனதின் நினைவினை விட்டு 
அகலாமல் பதிந்து விட்டது
என் நினைவு தேசத்தில்... 
நினைவு தேசத்தின் 
பாதச் சுவடுகளை அழிப்பது சுலபமல்ல..

ஏதோ ஒரு பறவையின் 
தொலைந்து போன
சிறகானது .....
காற்றோடு பேசிக்கொண்டே...
காற்றின் தீர்ந்து விடாத 
பக்கங்களில் எல்லாம் 
தன்னைப் பற்றி 
எழுதிச் செல்கிறதாம்....
அது போலவே...
வாழ்வும் 
நிகழ்ந்து முடிந்து விட்ட 
நிமிடங்களை..
அதன் முற்றுப் பெறா பக்கங்களில் 
எழுதிக் கொண்டு தான் இருக்கிறது...

உன்னில் கொண்ட நட்பும் 
பொறிக்கப்பட்ட கல் வெட்டாகத் தான்...
அழித்தல் என்பது நடவாத காரியம்...
சாம்பலிலும் உயிர்பிக்கும் 
பீனிக்ஸ் பறவையாக 
மீண்டும் மீண்டும் 
உயிர்பிக்கும்...
நம் நட்பு....
என் சாம்பலிலும்....!!!!




பல ஜென்மங்கள் 
கடந்த பின்னும்.. 
மீண்டும் மீண்டும்
வேண்டும் நட்பு இது..!!

பிறிதொரு நாளின் அமைதியான இரவினில் உன்னைப் பற்றி மேலும் பேச முற்படும் என் எண்ணங்கள்...
கவிதையின் வடிவினில்... 
அதற்கான முன்னோட்டம் தான் மேற்கண்ட வரிகள்...

என் நினைவேட்டின் பக்கங்கள் உன்னை பற்றி நிறைத்த வண்ணம் தான்..
என் எண்ணத்தில் நிறைந்திருக்கும் உன் வண்ணங்கள் மட்டுமே என் இதயத்தின் ரணங்களுக்கு மருந்தாகிறது....

வார்த்தைகளற்றதொரு வாக்கியத்தில் நிறைவு செய்கிறேன்.....

14 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

இது கதையல்ல நிஜமா???????????

யார் அந்த அன்பு தோழன்??????????????????

அவரின் பெயரையும் சொல்லி இருக்கலாம்... சொன்னால்.... நாங்களும் எங்கள் இதயத்தின் ரணங்களுக்கு மருந்து கிடைக்குமா என்று பார்ப்போம்....

முடிவுறா வார்த்தையின் வழியில் வேண்டலை வைக்கிறேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ந்துகனும்...

கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி...

முஸ்தபா முஸ்தபா.... Don't Worry முஸ்தபா...

Nanthu said...

Sowmi

வழக்கம்போல... கலக்கிட்டிங்க..!!!

Unknown said...

///இது கதையல்ல நிஜமா???????????///

நிச்சயமாக இது கதையல்ல நிஜம் தான் ஸ்ரீ..

///அவரின் பெயரையும் சொல்லி இருக்கலாம்... சொன்னால்.... நாங்களும் எங்கள் இதயத்தின் ரணங்களுக்கு மருந்து கிடைக்குமா என்று பார்ப்போம்....///

ஹும்... உங்கள் ரணங்களுக்கு மருந்தாக எப்படி என் நண்பர் ஆக முடியும்....???

Unknown said...

மதிப்பு மிக்க உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஸ்ரீ...

Unknown said...

நன்றி நந்து..

priyamudanprabu said...

present...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

// நிச்சயமாக இது கதையல்ல நிஜம் தான் ஸ்ரீ.. //

நம்பிட்டோம்............. :)


// ஹும்... உங்கள் ரணங்களுக்கு மருந்தாக எப்படி என் நண்பர் ஆக முடியும்....??? //


நாங்களும் அவருடன் நல்ல நண்பராக பழகி எங்கள் இதயத்தின் ரணங்களுக்கு ஆறுதல் தேவைபடும் போது இலவசமாக மருந்து வாங்கிகொள்வோம்...

// மதிப்பு மிக்க உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஸ்ரீ... //

இந்த வெகுமதிப்பு நல்லா இருக்கே மினி...

ஆனா.... எது கருத்துரை?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

// ஹும்... உங்கள் ரணங்களுக்கு மருந்தாக எப்படி என் நண்பர் ஆக முடியும்....??? //

பெயரை கேட்டது உங்களை வம்பில் மாட்டிவிடதான் தோழி..... அவரை வம்புக்கு இழுப்பதற்கு அல்ல....

மாணவன் said...

nice...

:)

Shiva sky said...

அன்பான நட்பில்

ஆழமான நட்பு.......

நான் இதுவரை கனவிலும் நினைக்காத நட்பு...

Unknown said...

நன்றி மாணவன் மற்றும் ஷிவா... வருகைக்கும் வாசிப்பிற்கும்...

Unknown said...

@ வாசன்..

////பெயரை கேட்டது உங்களை வம்பில் மாட்டிவிடதான் தோழி..... அவரை வம்புக்கு இழுப்பதற்கு அல்ல....///


ஸ்ரீ... (ஏனப்பா இம்புட்டு கொலை வெறி)

என்னை வம்பில் மாட்டிவிட்டாலும் மீட்பதற்கு உங்களைத் தான் கூப்பிடுவேன் பரவாயில்லையா நண்பா..

நம்பிக்கைபாண்டியன் said...

நல்லதோர் நட்பின் நினைவுகள்!பாராட்டுக்குரிய நட்பு!