Wednesday, April 13, 2011

" முத்தத்தின் யுத்தம் " - 5


முத்தங்களால் 
கைது செய்து
முத்தங்களால்
 என்னை கொன்ற
மொத்தக் கொலைகாரன் 
நீ


என்றோ
ஒரு இரவில்
வந்த கனவில்
ஓடிக் கொண்டிருந்த
என்னை..
கை இழுத்து
கட்டி அணைத்து..
மற்றவர் 
பார்க்கும் முன்
விலகிச் சென்றாய்..
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
ஈரமாக்கினாய்
இதழ்களை..
இன்னமும் 
காத்திருக்கிறதடா
ஈர இதழ்கள்...
பெற்றதை 
திருப்பிக் கொடுக்க....!!

Tuesday, April 12, 2011

" முத்தத்தின் யுத்தம் " - 4



உன்
ஒவ்வொரு
கண் அசைவிற்கும்
ஒரு முத்தம் கேட்கிறாயே...
என் 
மொத்த அசைவிற்கும்
எத்தனை 
முத்தம் தருவாய்
நீ..?



காற்று கூட 
நம்மை 
பிரித்து விடக்கூடாது
என்றாய்..

நீ 
அனுப்பிய
பறக்கும் முத்தம்
மொத்தமும் எடுத்துக்கொண்டு
என்னையல்லவா கேலி
பேசுகிறது 
காற்று...




Monday, April 11, 2011

" முத்தத்தின் யுத்தம் " - 3


சும்மா
ஒரு முத்தம் கேட்கிறாய்..
எனக்குத் தெரியாதா
சிறு முத்தத்தையும்
பெரியதாக்கும்
வித்தைக்காரன்
நீ என்று...
 
 
உனக்கான காத்திருப்பில்..
என்
கோபங்களை
கொட்டித் தீர்க்க
முற்பட்டால்
நீ
மௌனமாய்
கொட்டித் தீர்க்கிறாய்
உன் காதல் அனைத்தையும்
ஒற்றை முத்தத்தில்..

என்                                                       
அளவில்லா கோபத்தையும்
வென்று விடுகிறதடா
உன் 
ஒற்றை முத்தம்....

" முத்தத்தின் யுத்தம் " - 2



"மொத்தத்தில் 
முத்தத்தின் ருசி 
எப்படி இருக்கும்..?"
கேட்கும் போதே   
ருசிக்கச் சொல்கிறது
 இதழ்கள்..



சத்தமின்றி
"மௌன மொழி"
பேசுகின்றன இதழ்கள்..
ஒரு முத்தத்திற்கும்
மற்றொரு முத்தத்திற்கும்
இடையே விழும்
சிறு இடைவெளியில்
இமைகளான 
உதடுகளின் வரிகள்
படிக்கப்பட்டதோ...
இதழ் பேசும் 
"வெட்க மொழியில்"
மீண்டும் 
ஆரம்பமானது
இதழ்களின் 
யுத்தம்..



Friday, April 8, 2011

" முத்தத்தின் யுத்தம் " -1


முத்தத்தின் மொழி
மௌனமா...
வெட்கமா...?

மௌனமாய் பார்க்கும் 
விழியாக உன்
இதழ்கள்..
வெட்கம் கொண்ட விழியாய்
என் இதழ்கள்...
இரு விழியும் 
ஸ்நேகமாய் பேசிக் கொள்ளும்
காதல் மொழி..
முத்தம்....


Thursday, April 7, 2011



பார்க்கும் 
இடத்தில் எல்லாம்
நீயே தான் 
தெரிகிறாய்..
கண் மூடிக் கொண்டேன்
கரு விழிக்குள் 
நிறைகிறாய்..
அன்பை கேட்டேன்
உன் உயிரையே தருகிறாய்..
ஆனாலும்
என்னை நீயேதான்
கொல்கிறாயடா...!

Sunday, April 3, 2011

மௌனமாய் பேசுது ... காதல்..

நித்திரையற்ற முன் இரவில்
உன் நினைவுகளால்
கை கோர்க்கிறாய்
நித்திரை ஆட்கொண்ட
பின் இரவில்
என் கனவினில் வந்து
கதவை தட்டுகிறாய்..
ஒரு முறை மட்டுமே
பார்த்த உன்னோடு 
பேசிக்கொண்டே ருக்கிறது
என் காதல் மட்டும் 
மௌனமாய்....