அம்மா..
அமைதியின்
போர்வைக்குள் ஒளிரும்
அன்பின் விலாசம் நீ..
எவ்வளவோ
எழுதியிருக்கிறேன்
ஆனால்
இன்று வரை
எழுதியதில்லை
உன்னைப் பற்றி
எதுவும்..
உன்னில்
கருவாகி உருவாகி
உனதுதிரத்தால்
உயிர் சுமந்து
இப்படி
பிரிந்து நிற்பேன்
என்றறிந்திருந்தால்
பிறவாமலே
இருந்திருப்பேன்..
நான்
துயில் துறந்து
விழிக்கும்
ஒவ்வொரு நாளிலும்
என் முன் நிற்பாயே..
இப்போது
உனை
பாராமல் இருக்கிறேன்
நிதமும்..
சிறுவயதின் அழுகையில்
ஏனென்று கேளாமலே
அரவணைத்து
எனதழுகை நிறுத்துவாயே..
இப்போது
மௌனமாக
மனதிற்குள் அழுகிறேன்
உன் அரவணைக்கும்
கைகளை தேடுகிறேன்..
.
மழலையில்
வார்த்தைகள்
புரியாத போதும்
நீ மட்டும் புரிந்ததாய்
தலை சரித்து
சிரித்துக் கொஞ்சுவாயே..
இப்போது
பேசுவதற்கு கூட
வார்த்தகள் தேடுகிறேன்..
.
தோளில் சாய்த்து
நான் கண்ணுறங்க
நீ விழித்திருப்பாயே..
இப்போது நாட்கள் கடந்து
தூக்கம் மறந்து நிற்கிறேன்..
என் பசியறிந்து
பசியாற்றிய காலங்கள்
நீ பசிமறந்து நின்ற
நினைவுகளை
நிறுத்துகிறது நெஞ்சில்..
இப்போது
என் பசி மந்தித்து
வெகு நாட்களாக
இருந்தும்
இல்லாதிருக்கிறேன்..
தவறு செய்தால்
தண்டிப்பாயே..
உன்னை
நிராகரித்துச் சென்ற எனக்கு
என்ன தண்டனை
கொடுக்கப் போகிறாய்
அம்மா..??
உன்னை
விட்டுச் சென்ற நாளில்
நீ எவ்வாறெல்லாம்
பதறினாயோ...
எனக்கு
இப்போது புரிகிறதம்மா
நிராகரிப்பின்
வலியும் வேதனையும்..
மீண்டும்
என் தலை கோதி
என்னை அரவணைப்பாயா..
உன் மடியில் குழந்தையாவேனா
அம்மா..??
நன்றி,
நட்புடன் சௌம்யா...
4 comments:
என் பசியறிந்து
பசியாற்றிய காலங்கள்
நீ பசிமறந்து நின்ற
நினைவுகளை
நிறுத்துகிறது நெஞ்சில்..
இப்போது
என் பசி மந்தித்து
வெகு நாட்களாக
இருந்தும்
இல்லாதிருக்கிறேன்..//
ஏதோ செய்கிறது!மனதுக்குள்
ம்ம்ம்ம்
கண்கலங்க வச்சிட்டீன்ங்க....சூப்பர்ப்....!!!!!!
ஒரு உயிர்ப்பான கவிதை .
நீண்ட நாட்களுக்கு பின் மிகவும் ரசித்த கவிதை ... வாழ்த்துக்கள்
Too gud... Suberb
Post a Comment