உன்னை
ஒருமுறை தான்
திரும்பிப் பார்த்தேன்..
பிறகுதான்
அடிக்கடி
விரும்பிப் பார்த்தேன்..
உன்
" காதல் "
தான் வேண்டும்
என கேட்டு அடம் பிடிக்கும்
" வளர்ந்த குழந்தை "
நீ..
உன்னுடன்
வார்த்தையாடும் போது
எதேச்சையாக
காதல் சொல்லி விடுவேனோ..??
என்று தான்
தவிர்த்துக் கொண்டே
இருந்தேன்
என் வார்த்தைகளை..
கைபேசியில்
உன் குறுஞ்செய்திகளை
அழிக்கும்
ஒவ்வொரு முறையும்
அது அழித்துக் கொண்டு இருந்தது
என் தயக்கத்தை..
நம்
இருவருக்கும்
மட்டுமான
கைபேசி உரையாடலின்
சில தருணங்களின்
இடையில் எழும்
சிறு அமைதியில்
உன் மனதோடு
உரையாடியது
என் காதல்..
முதன் முறையாக
உன் உரையாடல்
இல்லாத அன்று தான்
உணர்ந்தேன்
தொலைபேசி
எத்தனை " அன்னியம்"
என்று..
இப்படி
" நிறைய நீயும்
கொஞ்சம் நானுமாக
எனக்குள்ளே
காதல் "
12 comments:
நிறைய நீயும்
கொஞ்சம் நானுமாக
எனக்குள்ளே
காதல் "//
cute lines..
// உன்னுடன்
வார்த்தையாடும் போது
எதேச்சையாக
காதல் சொல்லி விடுவேனோ..??
என்று தான்
தவிர்த்துக் கொண்டே
இருந்தேன்
என் வார்த்தைகளை.. //
அருமையா இருக்கு தோழி...
நிறைய நினைவுகளும்... கொஞ்சம் கனவுகளும் என்பது போல்....
நிறைய யதார்த்தங்கள்... கொஞ்சம் கற்பனைகள் என்பது போல்...
attagasam...
picture engernthu pucheenga.. cute ah irukku.
உன்னை
ஒருமுறை தான்
திரும்பிப் பார்த்தேன்..
பிறகுதான்
அடிக்கடி
விரும்பிப் பார்த்தேன்..
//
அருமை!
கவிதை முழுக்க காதல் கசிந்தோடுகிறது!
எளிய வார்த்தைகளில் அழகிய கவிதை!
//
உன்னை
ஒருமுறை தான்
திரும்பிப் பார்த்தேன்..
பிறகுதான்
அடிக்கடி
விரும்பிப் பார்த்தேன்..
//
கலக்கல் வரிகள்
அனைத்திலும் இணைத்துவிட்டேன்
காதல் எப்படி எல்லாம் எழுத வைக்கிறது...?! :))
கவிதை ஒவ்வொன்றும் மிக அழகு !
கவிதையும் அழகு படமும் அழகு.வாழ்த்துக்கள்.
படிக்க படிக்க அழகா இருக்கு சௌம்யா ..!
நல்ல ஓவியம்.
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
நிறைந்த காதலும் , நிறைவான கவிதையுமாய்
அழகிய படைப்பு ..
வாழ்த்துக்கள் மேடம் //
Post a Comment