அனைத்தாலும்
புதிதாகத்தான் இருக்கிறது
ஒவ்வொரு முறையும்
உனதனைப்பு...
நீ முத்தமிடும்
நளினம் கண்டே
விலகிப் போனதடா
என் வெட்கம்...
என்னை
கொல்வதற்கென்றே
ஒரு பார்வையும்..
என்னை
கொள்ளையடிப்பதற்கென்றே
ஒரு சிரிப்பையும்
வைத்திருக்கிறாய் நீ...
அருகில் உறங்கும்
நேரங்களில் எல்லாம்
என் உறக்கம் தொலைத்தே
விழித்திருக்கிறேன்
உன் உறக்கம் ரசிக்க...
எங்கேதான்
கற்றுக்கொண்டாயோ..?
அழகாய் உறங்குவதற்கு..!!
உன் தலை கோதும் போது
என் கைவிரல் இடுக்கில்
அகப்பட்ட ஒற்றை முடியை..
நீ அறியாமல்
பதுக்கிக் கொண்டது
என் புத்தம் புது டைரி..!
நீ கடித்தெறிந்த
உன் கைவிரல்
நகத்துண்டுகள்
பிறை நிலவினை விட
அழகானது...
பார்வை தொடரும்
இடமெல்லாம்
நின்று
கள்ளமாய் சிரித்து
என் உள்ளம்
தொடுகிறாயடா
என் கள்ளச்சிரிப்பழகா...!
என்னுள்
தட்பவெப்ப மாற்றம்
நிகழ்த்துகிறாய் நீ..
உச்சி வெய்யிலிலும்
என் உள்ளம்
குளிர்விக்கிறது
உன் அருகாமை..
என் செல்ல ஸ்நேகிதா
அறியாமல் தான்
கேட்கிறேன்
என்ன மந்திரம்
செய்கிறாயடா நீ...???
என் செல்லக் குறும்புக்காரா..
பேசிக்கொண்டு
இருக்கையில்
திடீரென
முத்தமிட்டுவிட்டு
ஏதுமறியாது
சிரித்துப்
பேசிவிடுகிறாய் நீ..
அதில்
சிக்கலாவதென்னவோ
என் மனம் தான்..
"இங்கே வா..
என்னை ஒரு
புகைப்படம் எடு"
என்கிறாய்..
அது என்ன ..
என் விழிகளை விட
அவ்வளவு அழகாக
படம் பிடித்து
விடுமா உன்னை..?
என் காதல் பெரிதா..?
என கேட்டாய்..
இறுமாப்புடன்
சொல்லத் தொடங்கினேன்
கவிதையில்
காதலை..!
இப்போது
நீ சொல் என்றேன்...
புன்னகைத்துவிட்டு
முத்தங்களால்
சொல்லத் தொடங்கினாய் நீ..
தோல்வியோடு
தலை குனிந்ததடா
என் கவிதைகள்..
10 comments:
//
எத்தனை முறை
அனைத்தாலும்
புதிதாகத்தான் இருக்கிறது
ஒவ்வொரு முறையும்
உனதனைப்பு.
//
அருமையான வரிகள்
கவிதை கலக்கல்
சின்ன சின்ன விசயங்களை உணர்வு கவிதையாய் தந்திருகிறீர்கள் ஆனால் காதலர்களுக்கு இவை பெரிய விடயங்களே கலியாணம் முடிஞ்சபின் ????????????
கவிதை படிக்கும் போதே மனதை வருடுகிறது..
கவிதை படிக்கும் போதே மனதை வருடுகிறது..
ரசித்த உள்ளங்களுக்கு நன்றிகள் பல...
///சின்ன சின்ன விசயங்களை உணர்வு கவிதையாய் தந்திருகிறீர்கள் ஆனால் காதலர்களுக்கு இவை பெரிய விடயங்களே கலியாணம் முடிஞ்சபின் ????????????////
உண்மைதான் கவியழகன்... திருமணத்தின் பிறகு காதல்.. கா....தல் ஆகிவிடுகிறது.. விருப்பு வெறுப்புகள் பொருத்து..
நன்றி கருண்... தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்க்கும்..!
nalla கவிதைgal..
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சமுத்ரா....
Post a Comment