Thursday, March 24, 2011

எப்படி சொல்வேன்..???


எப்படி சொல்வேன்
உனக்கு எப்படி சொல்வேன்
என் அன்பை..

என் மௌனத்திலா..?
என் கோபத்திலா..?
என் கண்ணீரிலா...?
உன்னை பார்த்த உடன்
பூத்துவிடத் துடிக்கும்
என் புன்னகையிலா..?

என் விழிகள் முன்மொழியாத
என் அன்பை..
என் கவிதையின் வரிகளில்
வழிமொழியவா..??

எப்படி சொல்வேன்....
என் அன்பை...??

******************************
இடைவெளியற்ற உன் நினைவால்
இடையில் என் வரிகளும் விட்டுப்போகிறதடா..

என் கவிதைகளை தானே
வாசிக்கச் சொன்னேன்...

நீ
ஏன் மௌனித்துக் கொள்கிறாய்..??
ஏன் மௌனித்துக் கொல்கிறாய்...???

12 comments:

பனித்துளி சங்கர் said...

காதல் ரசனை கவிதையில் அழகாகக் காட்சி தருகிறது வாழ்த்துக்கள் . தொடர்ந்து எழுதுங்கள்

பனித்துளி சங்கர் said...

ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

sasirekha said...

மிகவும் அருமை!!

logu.. said...

\\இடைவெளியற்ற உன் நினைவால்
இடையில் என் வரிகளும் விட்டுப்போகிறதடா..

என் கவிதைகளை தானே
வாசிக்கச் சொன்னேன்...

நீ
ஏன் மௌனித்துக் கொள்கிறாய்..??
ஏன் மௌனித்துக் கொல்கிறாய்...???\\

ஹி..ஹி..
ரொம்ப கஷ்டபடுவீங்க போல..
கவிதை ரெண்டும் ஜூப்பருங்க.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தோழி மிகவும் அருமையான உணர்வின் வெளிபாடு... மெய்சிலிர்த்துபோகிறேன்....

நீங்கள் மெளனத்தில் காக்கும் அன்பு
அவன்(ள்) காணாத நாணங்களாய்
புரிந்துகொள்ள முடியாமல் போககூடும்...

நீங்கள் கோபத்தில் கொள்ளும் அன்பு
காட்டியது அனுதாபங்கள் மட்டுமென
அவனை(ளை) விரக்தியடைய செய்யகூடும்...

நீங்கள் புன்னகைக்க காத்திருக்கும் அன்பு
உள்ளத்தில் வீற்றிருக்கும் உங்கள்
காதலை நன்குஅறிந்து கொள்ளகூடும்....

நீங்கள் கண்ணீரில் சிந்தும் அன்பு
உதிரத்தில் துடிக்கும் உண்மைநிலையை
எண்ணியாவது விலகி இருக்கதூண்டும்...


அன்பிற்கு பலவடிவம் உண்டு... இடத்திற்கு ஏற்ப மாறுவதுண்டு.... உங்கள் வரிகளில் மனதினில் உள்ளதை சொல்லிக்கொண்டு....

அன்பினை நீங்கள் எப்படி காட்டினாலும் அன்பினை எதிர்பார்க்கும் அன்பிற்கு உங்கள் அன்பினை ரசிக்க மட்டும் தெரியாமல் போகாது...

விழிகள் சொல்லாத அன்பை.... மனம் சொல்லும் போது... வரியும் கவிதையும் அழகு பெறும்....
படிக்கும் அவன்(ள்) மனமும் மகிழும்... கவிதையாய் எ(ன)ங்களுக்கும் காட்டுங்கள்....

இதயம்கூட துடிக்கமறந்து இடைவெளி எடுக்ககூடும்...
நினைவுகள் மறக்காமல் துடிக்க செய்துகொண்டோ....

கவிதையே நீயென அவன்(ள்) ரசிக்கின்றானோ உன்னை இதயத்தில் எக்கணமும்.... கவிதையை வடித்த கவிதையையே வாசித்துக்கொண்டோ?

மெளனங்கள் கலையட்டும்... உங்கள் அன்பு உலகையும் வெல்லட்டும்....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

// எப்படி சொல்வேன்
உனக்கு எப்படி சொல்வேன்
என் அன்பை..//

வாயால் சொல்லுங்க...வார்த்தைகளால் பேசுங்க... எங்கள கேட்டா? நாங்க என்னத்த சொல்லுறது..

உங்களுக்கே தெரியாதப்ப உங்கள் அன்பு அவருக்கு எப்படி தெரியும்.... சும்மா தைரியமா சொல்லுங்க...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

// இடைவெளியற்ற உன் நினைவால்
இடையில் என் வரிகளும் விட்டுப்போகிறதடா..//


உங்களுக்கே இப்படினா... உங்களுக்கு நினைவை தரும் அவருக்கு எப்படியோ?

அப்பப்பா இப்பவே கண்ண கட்டுதே....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

// என் கவிதைகளை தானே
வாசிக்கச் சொன்னேன்... //

சரியா சொன்னீங்களா? காது கேட்டு இருக்காது...

இல்லாட்டி படிக்க தெரியாம போயிருக்கும்...அதனால தான் இந்த பிரச்சனை...

கவிதையில போடுற படத்தை பார்த்து கவிதையை வாசிக்க மறந்து படத்தில் மயங்கிட்டாரு போல...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

// நீ
ஏன் மௌனித்துக் கொள்கிறாய்..??
ஏன் மௌனித்துக் கொல்கிறாய்...??? //

நீங்க பழிக்கு பழியாய் அவரிடம் பேசி பேசி கொன்று புதைத்து விடுங்கள்...

மெளனத்திற்கு தண்டனை கொடுத்து நீதிபதி ஆகிவிடுங்கள்...

Unknown said...

சங்கர் நன்றி தம்பி..

சசி thanks da...

///ஹி..ஹி..
ரொம்ப கஷ்டபடுவீங்க போல..///

என்ன சொய்ய லோகு காதலை கவிதையில் சொல்ல தெரியாம தான் இப்படி கிறுக்கறேன்.. அப்பயும் முடியல..


///கவிதை ரெண்டும் ஜூப்பருங்க.///

நன்றி லோகு..

Unknown said...

@ வாசன்...

ஸ்ரீ.. கவித கவித... முன்னாடியே இத என்கிட்ட குடுத்து இருந்திருக்கலாம்..

ஹும்.. இனி எல்லாம் என் கவிதைக்கு கமெண்ட்ஸ் போடாம உன் கமெண்ட்ஸ்க்கு தான் போட போறாங்க..

Shiva sky said...

காதல் என்றாலே..மவுனம் தானே.....

மவுனத்தால் ....காதல் வலியும் அதிகரிக்கும்....காதலும் அதிகரிக்கும்