எங்கு நோக்கிலும் நீலம்....
கீழும் நீலம்
மேலும் நீலம்
எட்டாத் தொலைவு தன்னில்
பார்வையின் சிறு வட்டத்திற்குள்
கவிகிறது நீலவானம்...!
ததும்பும் நீரில்
தடம் மாறாமல்
உருண்டு நிற்கின்றன
மனித உடல்களும், உடமைகளும்..!
தொகுதி தொகுதியாய் கார்களும்
கரைந்து போன மண்ணாய் கட்டிடங்களும்..
ஒளி வெள்ளத்தில் மிதந்த நகரம்
இன்று நீரில் மிதந்து
இருளோடு கவிகிறது..!
பசிபிக் பெருங்கடலே - நீ
அலை அலையாய் புன்னகைத்தாயே...!
இதற்குத் தானா..??
சில வருட இடைவெளிக்குப் பின்னான
இரண்டாம் பாகமோ....?
உன்னுள் சிக்கியவர்கள்
மூழ்கினார்கள்...
வெளிவந்தார்கள்..
மறைந்தார்கள்...
நீர் குடித்து நிலை மறந்தார்கள்..
மிதந்தார்கள் சடலங்களாய்..!
இரக்கமின்றி களவாடி விட்டாய்
இறுகி நிற்கிறோம் நாங்கள்...
இரு பகல்
இரு இரவு முடிந்து விட்டது..
தடம் மாறி வந்த தடயத்தால்
பார்வைகளால் மட்டுமே
ஒருவரை ஒருவர்
நலம் விசாரிக்கும் ஊமை வாழ்க்கை
அரங்கேற்றமாகிறது அங்கு...!!
10 comments:
அவர்கள் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்
ததும்பும் நீரில்
தடம் மாறாமல்
உருண்டு நிற்கின்றன
மனித உடல்களும், உடமைகளும்..!
sokam thaan vethanai thaan,,,,,
Vetha. Elangathilakam.
Denmark.
http://kovaikkavi.wordpress.com/
தன்னம்பிக்கையில் தேர்ந்தவர்கள் ஜப்பானியர்கள். மீண்டுமாக நிமிர்ந்தெழுந்து நிற்க வாழ்த்துவோமாக.
mmm :(
ஜப்பான் மக்களுக்கு..
உங்கள் கவிதை சமர்பனம்....
உங்கள் நல்மனம் வாழ்க..!
//அவர்கள் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்//
நானும் பிரார்தனை பண்ணிட்டேங்க..
///sokam thaan vethanai thaan,,,,,///
என்ன செய்யறதுங்க..
எல்லாமும் விதி வழி..
///தன்னம்பிக்கையில் தேர்ந்தவர்கள் ஜப்பானியர்கள். மீண்டுமாக நிமிர்ந்தெழுந்து நிற்க வாழ்த்துவோமாக.///
உண்மையாக ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையில் தேர்ந்தவர்கள் தான் .. நிச்சியம் மீண்டு வருவார்கள்.. நன்றி
//mmm :(/// பிரபு இந்த mmm க்கு என்ன அர்த்தம்.. சோகமா..?? இல்லை பாவம் என்ற எண்ணமா..??
உங்கள் திருமண அழைப்பி இனிதாக வந்தது என் மெயில் பாக்ஸ் க்கு.. அழைப்புக்கு நன்றி...
///ஜப்பான் மக்களுக்கு..
உங்கள் கவிதை சமர்பனம்....
உங்கள் நல்மனம் வாழ்க.//// நன்றி ஷிவா...
Post a Comment