Tuesday, March 8, 2011

சிந்தனை செய் மனமே..!!

சில இம்சைகளோடு ..

பல கழிவுகளை பெற்றுக் கொண்டு

பொறுமையோடு நிற்கிறது

ஒரு குப்பைத்தொட்டி

தனக்குள் பேசிக்கொண்டே...

"வேண்டாத கழிவுகளுக்கு மட்டுமா..??

நீ வேண்டாம் என்று விசுறும்

உயிர் உள்ள பிஞ்சுகளுக்கும்..

நிரம்பிய குப்பையே மெத்தையாய்..

தாலாட்டு பாடாத தாயாக நான்..!!

என்னை கடக்கும் போது

முகம் சுழிக்கும் நீ..

குப்பையோ குழந்தையோ...

நீ வீசும் போது முகம் சுழிக்கவா நான்..??

மனிதா....

என்னை விட நீ எவ்விததில் உயர்த்தி..?"

10 comments:

logu.. said...

\\உயிர் உள்ள பிஞ்சுகளுக்கும்..

நிரம்பிய குப்பையே மெத்தையாய்..

தாலாட்டு பாடாத தாயாக நான்..!!\\

யாருமே யோசிக்காதது..
ரொம்ம்ப அருமைங்க.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

// என்னை கடக்கும் போது
முகம் சுழிக்கும் நீ..
குப்பையோ குழந்தையோ...
நீ வீசும் போது முகம் சுழிக்கவா நான்..?? //

முகம் சுழிக்க முடியாமல் இல்லை.... சுழிக்க முடியாமலும் இல்லை...

தாய் ஆயிற்றே பின்னெப்படி முகம் சுழிக்கமுடியும்... அகம் தாங்கியே வாழும் உயிராய்...

குப்பைத்தொட்டி...

குப்பையை சுமக்கும் தாய் மட்டுமல்ல...
சில மனிதர்களுக்கு ஊதியம் கொடுக்கும் கிடங்காய்...
சில உயிரனங்களுக்கு உணவளிக்கும் சத்திரமாய்...

இப்படி எத்தனையோ ஓர் பெண்ணை போலவே...

குப்பைத்தொட்டியே வாழ்க வாழ்க...

உங்கள் சிந்தனையும் வாழ்க...

Nanthu said...

Superb.... குப்பைதொட்டி கூட கவிதை ஆகிறது .. உங்க வரிகளில்

முதன்முதலாக.. குப்பதொட்டியை நேசிக்க கற்று கொண்டேன்... நன்றி தோழி.
நந்து......!!!

MANO நாஞ்சில் மனோ said...

//நீ வீசும் போது முகம் சுழிக்கவா நான்..??

மனிதா....

என்னை விட நீ எவ்விததில் உயர்த்தி..?"//

ஹேய் அருமையான சாடல் கவிதை சூப்பரா இருக்கு சௌம்யா....

Unknown said...

////யாருமே யோசிக்காதது..
ரொம்ம்ப அருமைங்க ////nandri logu...

Unknown said...

@ sree...////குப்பையை சுமக்கும் தாய் மட்டுமல்ல...
சில மனிதர்களுக்கு ஊதியம் கொடுக்கும் கிடங்காய்...
சில உயிரனங்களுக்கு உணவளிக்கும் சத்திரமாய்..///

மொத்தத்தில் அவளோ.. அவனோ.. அல்லது அஃறினையில் அதுவோ.. நிச்சயமாக ஒரு சுமைதாங்கி தான்..!!

Unknown said...

@ நந்து... உங்களுக்கு தான் முதல் நன்றி... விதைத்தது நீங்கள் தானே நண்பா...
இன்று சிறு செடியாக துளிர்து இருக்கிறது...!! என் மூலமாவது குப்பைத் தொட்டியை நேசிக்கக கற்றுக்கொண்டது நல்லது தானே...!!மகிழ்சி நண்பா..

Unknown said...

@MANO நாஞ்சில் மனோ....
சார் மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கும் வருகைக்கும்... மகிழ்வோடு நன்றிகள் பலவும் சார்..

sasirekha said...

மிக அருமையான வரிகள்!!

Shiva sky said...

வெகு அழகு.....மாறுபட்ட சிந்தனை.வாழ்த்துக்கள்