சற்றேரக்குறைய
இன்னும் சில நிமிடங்களில்
நான் செத்துப் போகலாம்..
ஒரு மிருகம் இரை திண்பதைப் போல்
வெகு வேகமாக
எனைத் திண்றுக் கொண்டிருக்கிறது
விலா வலிக்கச் சிரிக்கும்
அவனின் சம்பாஷனைகள்..
சுய பிரக்ஞையற்றுக் கிடக்கும் பொழுதொன்றில்
உருவமறியா பட்சினியொன்று
எனை உற்று நோக்கி
பரிதாபத்தோடு சிகை தாழ்த்தும்
அக்கணத்தின் முடிவில்
எனக்கான புதிய வாசஸ்தலம் ஒன்று
கண்டறியப் பட்டுள்ளதாகக் கொள்ளலாம்..
ஆம்..
இன்னும் சில வினாடிகளில்
நான் செத்து விடலாம்..
எவர் அறியக் கூடும்??
நெஞ்சழுத்தும் இவ்வலியோடு
அடர் வனமொன்றில்
குடை விரித்தாடும்
மரக்கிளையின் முகப்பொன்றில்
பட்டும் படாமல் அமர்ந்திருக்கும்
அச்சிறு பறவை
நானாகவும் இருக்கக் கூடும்...
2 comments:
அருமையான கவிதை படித்ததில் மனம் கனக்கிறது
எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..
Post a Comment