தனக்கே
உரித்தான ஒலியில்
ஓரழகிய பாடலோடு
சிணுங்கிக் கொண்டிருக்கிறது
அக் கைபேசி..
அப்பாடலின்
ஒற்றை நுனியை
பற்றியவாரே
அதன் பல்லவியின்
குறுக்கிலும்
நெடுக்கிலும்
மிதக்கத் தொடங்கினேன்
அதன் சரணத்தில்
என்னுயிர் கரைந்து
சட்டென்றொரு
பறவையாகி
வானில் பறக்கிறேன்
நிலவினருகில்
இளைப்பாருகிறேன்
நட்சத்திரங்களில்
உல்லாசமாய்
ஊஞ்சலாடுகிறேன்..
அப்பாடலின்
கடைசி ஆலாபனையில்
அருகிருந்த
மேகத்திற்குள்
தவறி விழுந்தேன்
அதில்
ஒளிந்திருந்த
மழை
பூக்களை
தூவியது..
அப்பாடலின்
முடிவில்
நானொரு
தேவதையாகித்
திரும்பினேன்
என்னிடத்திற்கு..
இப்போது
எனதிறகுகள்
அதன்
வரிகளை
எழுதத் தொடங்கின
எனக்குள்..
5 comments:
வித்தியாசமான அனுபவம். என்னப் பாடல் என்றுத் தெரியாமலேயே எனக்குள்ளும் ஒரு பாடலை கேட்ட மகிழ்ச்சி ஆட்க் கொண்டுவிட்டது.
வாழ்த்துக்கள்
நிலவினருகில்
இளைப்பாருகிறேன்//
ஆஹா கலக்கல், ரசித்தேன் ரசித்தேன்...!
கவிதை மிகவும் அருமை.
கவிதை மிக அருமை...பகிர்வுக்கு நன்றி...
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ரசிக்க வைத்தது வரிகள்... அருமை...
வாழ்த்துக்கள்...
Post a Comment